நித்திரவிளை அருகே வீடு இடிப்பு

நித்திரவிளை, பிப்.24: நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி ஷர்மிளா (35). இவர் அதே பகுதியை சேர்ந்த பாபு (60) என்பவரிடம் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் கடனாக வாங்கி இருந்தார். அதற்கான வட்டியை ஆரம்ப காலத்தில் கட்டி வந்த ஷர்மிளா, தற்போது வட்டி கட்டவில்லை என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ரொக்க பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்க வில்லையாம். இதனால் பாபுவுக்கும், ஷர்மிளாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ஷர்மிளா குடும்பத்தினர் ஒரு திருமண வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது ஷர்மிளா தங்கியிருந்த வீட்டை பாபு, அவரது தம்பி மணி மற்றும் கண்டால் தெரியும் கும்பல் இடித்துள்ளது. இது சம்பந்தமாக ஷர்மிளா நித்திரவிளை காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: