நித்திரவிளை அருகே பைக் மோதி பெண் பலி

நித்திரவிளை, பிப்.19: நித்திரவிளை அருகே எஸ்.டி. மங்காடு நயினான் வளாகம் பகுதியை சேர்ந்தவர் சாரதா (73). நேற்று முன்தினம் மாலை பொருட்கள் வாங்க கடைக்கு போய் விட்டு வீட்டுக்கு செல்ல சாலையை கடக்கும் போது, ரூட்சன் (23) என்ற வாலிபர் ஓட்டி வந்த பைக் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த மூதாட்டியை அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை சாரதா உயிரிழந்தார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: