பத்மநாபபுரம் நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை

தக்கலை,பிப்.20: பத்மநாபபுரம் நகராட்சிப்பகுதியில் ெதரு நாய்களுக்கு கருத்தடை பணி தொடங்கியது. பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் அரண்மனையை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்கள் சர்வ சாதாரணமாக வலம் வருகின்றன. இதனால் அரண்மனையை பார்வையிட வரும் சுற்றுலா பணிகள் அச்சப்படும் நிலைக்கு ஆளாகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் அருள் சோபனிடம் கூறினர். இதையடுத்து நகராட்சித் தலைவர் ஆணையாளரிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதன்பேரில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய முடிவு செய்யப்பட்டு நகரில் வலம் வந்த நாய்கள் துப்புரவு ஊழியர்களால் பிடிக்கப்பட்டு தக்கலை கால்நடை மருத்துவமனையில் வைத்து கருத்தடை செய்யும் பணி நடந்தது.

Related Stories: