ஊட்டி தமிழ்நாடு மாளிகையில் ஹாயாக உலாவந்த சிறுத்தைகள்

ஊட்டி: நீலகிரி மாவட்ட கலெக்டரின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகம், தமிழ்நாடு ஆய்வு மாளிகை உள்ளிட்டவைகள் பிங்கர்போஸ்ட் அருகே அமைந்துள்ளன. வனத்தை ஒட்டிய பகுதி இது என்பதால் இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது இருக்கும். தமிழ்நாடு ஆய்வு மாளிகை நுழைவாயில் பகுதியில் இருந்து சாலை மற்றும் இருபுறமும் புல்வெளிகளுடன் கூடிய சிறு பூங்கா உள்ளது. சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 சிறுத்தைகள், தமிழ்நாடு மாளிகை வளாகத்தில் புகுந்து அங்கு சாலையில் ஹாயாக உலா வந்தன. சிறிது நேரம் அப்பகுதியில் உலா வந்த சிறுத்தைகள், நுழைவாயில் வழியாக வெளியில் சென்று மறைந்தன. இது அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு மாளிகை பகுதியில் சிறுத்தைகள் உலா வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: