பழ வியாபாரியை கொலை செய்த வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: பழ வியாபாரியை கொலை செய்த வழக்கில் பெண் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த பழ வியாபாரி வேலுவிடம் கலா என்பவர் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார். கடன் தொகையைக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் வேலுவை 2013ல் உறவினர்களுடன் சேர்ந்து கலா கொலை செய்துள்ளார். கலா, அருண், சதீஷ், சந்தோஷ்குமார் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.2,000 அபராதம் விதித்து ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.

Related Stories: