குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

சென்னை: விருத்தாச்சலம் பெரியார் நகரில் பேச்சு மூச்சில்லாமல் இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி, அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலர் சரவணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

“அன்பின் வழியது உயிர்நிலை

சில நாட்களுக்கு முன்னர் காவல்துறையில் பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோது, “காவலர் பணி மனிதநேயத்தோடு இணைந்ததாக இருக்க வேண்டும். வீரத்தின் அடித்தளம் அன்புதான்” என அறிவுறுத்தி இருந்தேன்.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ள தலைமைக் காவலர் சரவணன் அவர்களுக்குப் பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.

Related Stories: