ஆட்டோ மோதி பலியான மின் பொறியாளர் குடும்பத்துக்கு ரூ.1.67 கோடி இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவு..!!

சென்னை: ஆட்டோ மோதி பலியான மின் பொறியாளர் குடும்பத்துக்கு ரூ.1.67 கோடி இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 2023ல் வண்டலூர் புதிய மேம்பாலத்தில் ஆட்டோ மோதி பைக்கில் சென்ற மின் பொறியாளர் வசந்தகுமார் பலியான வழக்கு இரு விசாரணைக்கு வந்தது. வசந்தகுமார் மரணத்துக்கு இழப்பீடு கேட்டு அவரது மனைவி தீபிகா சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வசந்தகுமார் குடும்பத்துக்கு டாடா ஏ.ஐ.ஜி. காப்பீட்டு நிறுவனம் ரூ.1.67 கோடி இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

Related Stories: