சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் மர்ம லைட் புஷ் மலர்கள்

குன்னூர் :  குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் மர்மலைட் புஷ் வகை மலர்கள் காண்போரை கவர்ந்து வருகிறது.நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா நூற்றாண்டு பழமை வாய்ந்தது.  இங்கு அரிய வகை மரங்கள் மற்றும் மலர்ச்செடிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் இந்த பூங்காவில் பழக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.வரும் மே மாதம் பழக் கண்காட்சிக்காக  குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.

இதில் அமெரிக்கா ஜப்பான் பிரான்ஸ் ஜெர்மனி நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் தருவித்த நாற்றுக்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு 150க்கும் மேற்பட்ட ரகங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.  இந்த நிலையில்  பூங்காவில்(மர்மலைட் புஷ் ) புதர் வகையை சேர்ந்த பூக்கள் நடவு செய்யப்பட்டது. தற்போது அந்த பூக்கள் அனைத்தும் பூத்து மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்த பூக்களுக்கான  சீசன் ஜனவரி முதல் ஏப்ரல் வரை காணப்படுகிறது. சிம்ஸ் பூங்காவில் இந்த பூக்கள் பூத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Related Stories: