இரவிகுளம் தேசியப் பூங்கா ஏப்ரல் 1ல் திறப்பு 47 வரையாடு குட்டிகள் மூணாறுக்கு புதுவருகை

மூணாறு : மூணாறில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் நடப்பாண்டில் இதுவரை 47 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளன.தென்னகத்து காஷ்மீர் என்றழைக்கப்படும் கேரள மாநிலம், மூணாறுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவர்வது, இங்குள்ள இரவிகுளம் தேசிய பூங்கா.

இந்த பூங்கா வரையாடுகள் இனப்பெருக்க காலத்திற்காக பிப். 1 முதல் மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பூங்காவின் வனப்பகுதியில் இதுவரை 47 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக குமரிக்கல்லு என்ற பகுதியில் அதிகளவில் வரையாடு குட்டிகள் பிறந்துள்ளன.

இப்பகுதியில் இதுவரை 13 வரையாடு குட்டிகளை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ஆனைமுடியில் 7, பெட்டிமுடியில் 4, ராஜமலையில் 5 குட்டிகள் மற்றும் வரையாடுமேடு, மேஸ்திரிகெட்டு ஆகிய இடங்களிலும் வரையாடு குட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்தாண்டு இரவிகுளம் தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் 125 வரையாடு குட்டிகள் பிறந்தன. தற்போது இனப்பெருக்க காலம் முடிந்ததும் ஏப். 1ம் தேதி பூங்கா திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: