கோல்டன் குளோப் விருது பெற்ற ஹாலிவுட் மூத்த நடிகை மரணம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த பிரபல நடிகை ராகுவெல் வெல்ச் (82), கடந்த சில மாதங்களாக வயோதிகத்தின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் காலமானார். ஆனால் அவரது இறப்புக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வெல்ச் சிகாகோவில் பிறந்த ராகுவெல் வெல்ச், தொலைக்காட்சி சேனலின் வானிலை வாசிப்பாளராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் தொலைகாட்சி, திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

1960ம் ஆண்டுகளில் பிகினி ஆடையில் தோற்றமளித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். அப்போது இவரது பிகினி டிரஸ் ஹாலிவுட் பின்-அப் ஆக இருந்தது. 1973ம் ஆண்டில் வெளியான தி த்ரீ மஸ்கடியர்ஸில் கான்ஸ்டன்ஸ் பொனாசியக்ஸ் என்ற பாத்திரத்திற்காக கோல்டன் குளோப் விருதை வென்றார். இந்நிலையில் அவரது மறைவு ஹாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: