முடிசூட்டு விழாவில் கோஹினூர் வைர கீரிடத்தை தவிர்த்த ராணி கமீலா

லண்டன்: இங்கிலாந்தில் மிக நீண்ட ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராகியுள்ளார். மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் முடிசூட்டு விழாவில் ராணி கமீலா கோஹினூர் வைரம் பதித்த கீரிடம் அணிவதை தவிர்க்க முடிவு செய்துள்ளார். அதற்கு பதிலாக அவர் ராணி மேரியின் கீரிடத்தை அணியவுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இரண்டாம் எலிசபெத் கிரீடத்தில் இடம்பெற்றிருக்கும் கோஹினூர் வைரமானது உலகிலேயே வெட்டப்பட்ட மிகப்பெரிய வைரக் கல்லின் ஒரு பகுதியாகும். அது இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் லண்டன் எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: