விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையில் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

சேலம்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையில் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஜனவரி 27-ந் தேதி சேலம் மாவட்டத்திலும், நாளை 28-ந்தேதி நாமக்கல் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

நேற்று (26/01/2023) சேலம் மாவட்டம் வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லை, தலைவாசலில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் சேலம் மாவட்ட கழக செயலாளர்கள், எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு) பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் (மத்தி) மற்றும் டி.எம்.செல்வகணபதி (மேற்கு) முன்னிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக சென்னையிலிருந்து கார் மூலம் சேலம் வருகைதந்த அமைச்சருக்கு விழுப்புரத்தில் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கௌதம் சிகாமணி தலைமையில் வரவேற்பு அளித்தனர். மேலும், சென்னை, மறைமலை நகர், திண்டிவனம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை மற்றும் சேலம் அருகே மாடூர் டோல்கேட் ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: