குடியரசு தினத்தில் ஸ்பெஷல் கூகுள் டூடுல்

புதுடெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று ஸ்பெஷல் கூகுள் டூடுல் வெளியாகி உள்ளது. அதனை பலரும் பாராட்டி வருகின்றனர். நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனம், தனது டூடுல் அமைப்பை, அந்தந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது. அந்த வகையில் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தின விழாவினை பிரதிபலிக்கும் வகையில், கூகுள் நிறுவனம் தனது டூடுல் அமைப்பை இன்று மாற்றி அமைத்துள்ளது.

அதில் குடியரசு தின அணிவகுப்பின் பல்வேறு கூறுகள் இடம் பெற்றுள்ளன. ஜனாதிபதி மாளிகை, இந்தியா கேட், மோட்டார் சைக்கிள் சாகசம் உள்ளிட்டவை சிக்கலான கையால் வெட்டப்பட்ட காகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது போல் இடம் பெற்றுள்ளது. கூகுள் டூடுலின் புதிய வகை முயற்சியை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: