திருமலை: ஆந்திர மாநில அரசு ஆன்மிக சர்வதேச டவுன்ஷிப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. திருப்பதி விமான நிலையத்திற்கு அருகில் புதிதாக வசுதைகா குடும்பம் என்ற பெயரில் ஆன்மிக டவுன்ஷிப்பை உருவாக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர மாநில சுற்றுலாத்துறையுடன் இணைந்து கட்டுமானத்தை தொடங்குகிறது. இதற்காக டெல்லா கார்ப்பரேனுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சுமார் 1,400 ஏக்கர் பரப்பளவில் இந்த திட்டத்தின் கட்டுமானத்தை மேற்கொள்ளும் நிலையில், இதற்கு சுமார் ரூ.35,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர அரசு மற்றொரு லட்சிய ஆன்மிக சர்வதேச நகரத்தை கட்டத் தொடங்கியுள்ளது.
இங்கு உலகின் முதல் 5,000 ஆண்டுகள் வாழும் இந்து மத கண்காட்சி அமைக்கப்படும். இந்த நகரம் வடிவமைப்பு எதிர்கால நிபுணரான டெல்லா டவுன்ஷிப்ஸின் நிறுவனர் ஜிம்மி மிஸ்திரியுடன் இணைந்து கட்டப்படும். இதன் மூலம் 20,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் இந்த ஆன்மிக டவுன்ஷிப்பில் 300 ஏக்கரில் ஒரு வாழ்க்கை கண்காட்சி அமைக்கப்படும். ஒவ்வொன்றும் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில், 25 கண்காட்சிகளை கொண்டிருக்கும். சிந்து சமவெளி நாகரிகம் முதல் நவீன இந்து தத்துவம் வரையிலான இந்திய நாகரிகத்தை பிரதிபலிக்கும். 600க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட ஐந்து நட்சத்திர ரிசார்ட்டுகள், திருமண அரங்குகளும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
