ராஜஸ்தானில் விதிகளை மீறிய 10 பல் மருத்துவ கல்லூரிக்கு தலா ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், கடந்த 2016-17ம் கல்வியாண்டில் இளங்கலை பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையின் போது, தேவையான குறைந்தபட்ச நீட் சதவீத மதிப்பெண்ணிலிருந்து 10 சதவீதம் குறைத்து மாநில அரசு சலுகை வழங்கியது. அதன் பின் மேலும் 5 சதவீத மதிப்பெண்ணை குறைத்தது. இதன் மூலம் 56 மாணவர்கள் பிடிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விஜய் பிஷ்னோய், மகேஸ்வரி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. இதில் கடந்த 18ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள், மாணவர் சேர்க்கையில் கடும் முறைகேடுகளை செய்த 10 பல் மருத்துவ கல்லூரிகளுக்கும், மாநில அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தது. அங்கீகாரம் இல்லாமல் சேர்க்கை விதிகளை மீறியதற்காக 10 கல்லூரிகளுக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: