அமெரிக்காவில் மாகாண ஆளுநராக இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண துணைநிலை ஆளுநராக இந்தியாவில் பிறந்த அருணா மில்லர் நேற்று பதவி ஏற்று கொண்டார். மேரிலாண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக பதவி ஏற்றுள்ள முதல் இந்திய-அமெரிக்க பெண் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பிறந்த அருணா மில்லர் தன் 7வது வயதில் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறினார். 58 வயதாகும் அருணா மில்லர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  

Related Stories: