அமெரிக்காவில் பரபரப்பு; இந்திய வம்சாவளி பெண் படுகொலை: மாஜி காதலன் இந்தியாவிற்கு தப்பி ஓட்டம்

 

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் எலிகாட் நகரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நிகிதா கோடிசாலா (27) என்ற இளம்பெண், கொலம்பியா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் கடந்த 3ம் தேதி கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இவர் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி மாலை 7 மணியளவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர். இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் நிகிதாவின் முன்னாள் காதலரான அர்ஜுன் சர்மா (26), கடந்த 2ம் தேதி நிகிதாவைக் காணவில்லை எனப் போலீசில் பொய்யான புகார் அளித்து நாடகமாடியுள்ளார்.

பின்னர் அதே நாளில் அவர் விமானம் மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் கடந்த 4ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ‘கொலையுண்ட நிகிதாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். அவர்களுக்குத் தேவையான அனைத்து தூதரக உதவிகளையும் வழங்கி வருகிறோம்’ தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஹோவர்ட் கவுண்டி போலீசார், அர்ஜுன் சர்மா மீது முதல் மற்றும் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் பிடியாணை பிறப்பித்துள்ளனர். இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற அர்ஜுன் சர்மாவைக் கைது செய்ய அமெரிக்கப் போலீசாரும், இந்தியப் புலனாய்வு அமைப்புகளும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. போலீசில் பொய்யான புகார் அளித்து நாடகமாடியுள்ளார். பின்னர் அதே நாளில் அவர் விமானம் மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது

Related Stories: