பாங்காக்: ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் கடந்த டிசம்பர் 28ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி கலைக்கப்பட்டுள்ளதால், அவரும், அவரது கட்சியினரும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த முதல்கட்ட தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற ஒன்றிணைந்த ஒற்றுமை மற்றும் மேம்பாட்டு கட்சி((யூனியன் சாலிடாரிட்டி அன்ட் டெவலப்மென்ட் கட்சி) முன்னிலை வகிப்பதாக செய்திகள் வௌியாகி உள்ளன. இதுகுறித்து ராணுவ அரசு நடத்தும் மியான்மா அலின் என்ற நாளிதழில், “ராணுவ ஆதரவு பெற்ற , 330 இடங்களை கொண்ட ஹலுட்டாவ் கீழ்அவையில் 38 இடங்களை வென்றுள்ளது. ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
