மூளையில் பொருத்தப்படும் சிப்களை 2026இல் அதிகளவில் உற்பத்தி செய்ய திட்டம்: மஸ்க் அறிவிப்பு

மூளையில் பொருத்தப்படும் சிப்களை 2026இல் அதிகளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் மூலையில் பொருத்தப்படும் சிப்புகளை 2026ம் ஆண்டில் அதிக அளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மஸ்க் விடுத்துள்ள அறிவிப்பில் மூளையின் பாதுகாப்பு படலமாக நியூராவை அகற்றாமலேயே அதன் வழியாக சிப்பின் நுழைகளை செலுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இது அறுவை சிகிச்சையை எளிதாக்கும் எனவும் மூளையில் சிப் பொருத்துவதற்கு ரோபோர்டிக் அறுவை சிகிச்சை முறையை உருவாக்க நியூராலிங்க் நிறுவனம் முயன்று வருவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த சிப் பொருத்தப்பட்ட முதல் நபரான நோலன் அர்பாக் தனது சிந்தனைகள் மூலமாகவே கணினியை இயக்குவது டிவி சேனலை மாற்றுவது போன்றவற்றை செய்து காட்டினார்.

 

Related Stories: