தேனி மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் :14 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முடிவு..!!

தேனி: தேனி மாவட்ட விசைத்தறி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து 17 நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் சக்கம்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு போனஸ் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

 இது தொடர்பாக விசைத்தறி உரிமையாளர்களுடன் நடைபெற்ற நான்கு கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் திண்டுக்கல்லில் அம்மாவட்ட தொழிலாளர் நல இணை ஆணையர் திரு. கோவிந்தன் முன்னிலையில் நேற்று நடைபெற்ற 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. அதில் தொழிலாளர்களுக்கு 14 சதவிகித ஊதிய உயர்வு வழங்குது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: