சின்னமனூரில் போக்குவரத்து நெருக்கடிகளை தடுக்க நான்கு முனை சந்திப்புகளில் 3 ரவுண்டானா அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

சின்னமனூர்: சின்னமனூரில் போக்குவரத்து நெருக்கடிகளை தடுக்க நான்கு முனை சந்திப்புகளில் 3 ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை வரிசையின் அடிப்படையில் தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி, சின்னம னூர், உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, கம்பம் புதுப்பட்டி, கம்பம், கூடலூர் லோயர் கேம்ப், குமுளி என வரிசையாக ஐந்து நகராட்சிகளின் எல்லைகளில் வருகிறது. இதில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி அதிக வானங்கள் என பரபரப் பாக இருக்கும் நகாட்சிகளில் சின்னம னூரும் ஒன்றாகும். நகராட்சியில் உள்ள 27 வார்டுகள் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 கிராம ஊராட்சிகளில் 50 கிரா மங்கள் குச்சனூர், மார்க்கையன் கோட்டை ,ஓடைப்பட்டி,ஹைவேவிஸ் உள்ளி ட்ட மூன்று பேரூராட்சிகள் அடங்கிய பகுதிகளில் சுமார் 2.50 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியை சுற்றியும் தினந்தோறும் அதிக அளவில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு நிகழ்வுகளுக்கும் அரசு சம்பந்தமான விசயங்கள், கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், ஜவுளிக்கடைகள், நகை கடைகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி, வாரச்சந்தை, ஏலச்சந்தை என பல தரப்பட்ட இடங்களுக்கு செல்வதற்காக சின்னமனூர் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி என்பது அதிகளவில் காணப்படும். மேலும் தூத்துக்குடி, கேரளா மாநிலம் கொச்சின் துறைமுகம் நேரடி தொடர்பில் இருப்பதால் அடிக்கடி கண்டெய்னர்களு கடக்கும். ஏற்கனவே திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை என துவக்கப்பட்டு இருவழிச்சாலையாகவும் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் வாகனங்கள் அனைவரும் அனைத்தும் இயங்கி வருகின்றன.

தற்போது சில இடங்களில் நான்கு வழியாக மாற்றும் விதமாக சில இடங்களில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெருக்கடியினை குறைக்கும் விதமாக சீலையம்பட்டி கடந்தவுடன் கண்ணம்மாள் கோயிலுக்கு முன்பாக புறவழிச்சாலை செங்குளம் துவங்கி உடையகுளம் சிவகாமியம்மன் கோயில், மாணிக்கவாசகர் கோயில், பெருமாள் கோயில் கடந்து முத்துலாபுரம் விலக்கு பிரிவில் முடிந்து தேசிய நெடுஞ்சாலை அடையும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது .தொடர்ந்து இந்த புறவழிச்சாலையும் இயங்கி வருகிறது. ஏற்கனவே இருக்கும் இரண்டு சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியிருப்பதால் ஐயப்ப பக்தர்களின் அதிக அளவு வாகனங்கள் இப்பகுதியை கடந்து வருவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது.

வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா வாகனங்கள் உட்பட இந்த வாகனங்களின் வேகத்தை குறைக்கும் விதமாக மார்க்கையன்கோட்டை ரவுண்டானா நான்கு முனை பிரிவிலும், சீப்பாலக்கோட்டை பிரிவு காந்தி சிலை அருகே மும்முனை சந்திப்பிலும் ,சின்னமனூர் போடி மாநில நெ டுஞ்சாலையில் மாணிக்கவாசகர் கோ யில் அருகே தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையிலும் மேற்படி நான்கு சந்திப்புகளில் 3 ரவுண்டானாக்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் வக்கீல் மாரிச்செல்வம் கூறுகையில், ‘‘தேனி மாவட்டத்தில் அதிக பரப்பளவு கொண்ட அதிக வாகனங்கள் அதிக ஜனங்கள் கொண்ட நகரமாக சின்னமனூர் உள்ளது.

விவசாயத்திலும் முன்னுரிமை கொண்ட இப்பகுதிகளில் போக்குவரத்துகளை சீரமைக்கும் விதமாகவும் விபத்துகளை குறைக்கும் வண்ணம் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா சீப்பாலக்கோட்டை பிரிவு புறவழிச் சாலையில் போடி சின்னமுடன் மாநில நெடுஞ்சாலையிலும் இந்த சந்திப்புகளில் கட்டாயமாக ரவுண்டானா அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் விபத்தால் உயிர் பலிகள் ஏற்படுவதை யும்தடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். சமூக ஆர்வலர் மனோகரன் கூறுகையில், ‘‘இப்பகுதியில் வாகனங்கள் நாளுக்கு நாள் எண்ணிக்கை கூடும் நிலையிலும் போக்குவரத்து நெருக்கடி சமாளிப்பது பெரும் சவாலாக உள்ளது.

விவசாயம் அதிக அளவில் இருப்பதால் விவசாயிகள் உட்பட கூலி தொழிலாளர்கள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கிராம மக்கள் என அன்றாடம் சின்ன மனூருக்கு வருவதால் மேற்படி பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெ ற்று ஸ்தம்பிக்கிறது உயிர்பலிகள் சர் வசாதாரணமாக நடக்கிறது. குறைக்கும் நடவடிக்கையாக மார்க்கையன்கோட்டை ரவுண்டான பிரிவிலும், சீப்பாலக்கோட்டை பிரிவிலும், புறவழிச்சாலை பிரிவிலும் கட்டாயமாக ரவுண்டானாக்கள் அமைக்கப்பட வேண்டும்’’ என்றனர்.

Related Stories: