ஐகோர்ட் மதுரை கிளையின் முதல் பெண் சோப்தார் லலிதா

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில், முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை, ஐகோர்ட் வரலாற்றில் முதல் பெண் சோப்தார் ஆக திலானி என்பவர் கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது, ஐகோர்ட் மதுரை கிளையில், முதன்முதலாக பெண் சோப்தார் லலிதா நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி மாலாவிடம் இவர் சோப்தார் பணியில் உள்ளார். பெண் நீதிபதிகளுக்கான சோப்தாராக (செங்கோல் ஏந்தி செல்பவர்) இவர் செயல்படுவார். மதுரையை சேர்ந்த இவர் பட்டதாரி. தனக்கு இந்த பணி மிகவும் பெருமையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: