மேலூர் அருகே வயல் ஆய்வு விழிப்புணர்வு கூட்டம்

மேலூர்: மேலூர் உழவர்சந்தை சார்பில் வயல் ஆய்வு கூட்டம், விவசாயிகள் முன்னிலையில் நடைபெற்றது. மேலூர் உழவர்சந்தையை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து வாரந்தோறும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அங்குள்ள விவசாயிகளை சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் வேளாண் உற்பத்தி பொருட்களை உழவர்சந்தைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, மேலூர் அருகில் உள்ள கல்லம்பட்டியில் இந்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள், நுகர்வோர் என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர்.

உழவர்சந்தைக்கு விளைபொருட்களை கொண்டு வருவதற்கு இலவச பஸ் பயணத்துடன், லக்கேஜ் இலவசம், மின்வசதியுடன் கூடிய கடைகளுக்கு வாடகை கிடையாது, கமிஷன் கிடையாது, இடை தரகர் இல்லை என விவசாயிகளிடம் எடுத்து கூறப்பட்டது. இந்த கூட்டத்தில், உழவர்சந்தை நிர்வாக அலுவலர் அன்பழகன், உதவி அலுவலர் சாந்தி, மேலூர் தோட்டக்கலை அலுவலர் கற்பகம், பாண்டிசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: