வேட்டுவன்குளம் கண்மாயில் மணல் மூட்டைகள் அகற்றம்; விவசாயிகள் மகிழ்ச்சி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் உபரிநீர் செல்லும் இடத்தில் அடுக்கி வைத்த மணல் மூட்டைகளை அதிகாரிகள் அகற்றியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். பெரியகுளம் வராகநதி ஆற்றில் வரும் தண்ணீர் வடுகபட்டியில் இருந்து ராஜவாய்க்கால் மூலம் பிரிந்து மேல்மங்கலம் வழியாக வந்து வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்கிறது. இந்த வேட்டுவன்குளம் கண்மாய் ஜெயமங்கலத்தில் உள்ள கண்மாய் பாசனப்பரப்பு நிலங்களுக்கு இந்த தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நடப்பாண்டி பருவமழை போதிய அளவு பெய்து ஆரம்பத்திலேயே இந்த ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்கள் நிரம்பியது. கண்மாய் நிரம்பி உபரி நீரி வெளியேறிகொண்டிருந்தது. சிலர் கண்மாய் உபரிநீர் வெளியேறும் இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி கண்மாய் தண்ணீர் அளவை உயர்த்தியுள்ளனர்.

கண்மாயில் தேக்க நீருக்கு அதிகளவு தண்ணீர் தேக்கவும் அருகில் உள்ள சில்வார்பட்டி சிறுகுளம் பாசனப்பரப்பு வயல்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் 50க்கும் மேறப்பட்ட ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இந்த கண்மாய் உபரிநீர் வெளியேறும் இடத்தில் அடுக்கிய மணல் மூட்டைகளை அகற்றி நெல் வயல்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் வேட்டுவன்குளம் கண்மாய் உபரிநீர் செல்லும் இடத்தில் அடுக்கிவைத்த மணல் மூட்டைகளை அகற்றினர். இதனால் நெல் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிய ஆரம்பித்து குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: