சீர்காழியில் மழை பாதித்த 1.61 லட்சம் குடும்ப அட்டைக்கு ரூ.1,000 நிவாரணம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

சீர்காழி வட்டத்தில் வரலாறு காணாத கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 311 மின்கம்பங்கள், 36.32 கி.மீ மின்கம்பி, 42 மின்மாற்றி பாதிப்பு அடைந்துள்ளது. நீர் சூழ்ந்த பகுதிகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது. முதல்வர் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை இப்பகுதிக்கு நேரிடையாக அனுப்பிவைத்து வெளிமாவட்டம் மின் ஊழியர்களை கொண்டு, பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 6ஆயிரத்து 22 மின் இணைப்புகளுக்கு 36 மணிநேரத்தில் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது.

ஆறுகளில் 69 இடங்களில் ஏற்பட்ட உடைப்பு சீர்செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 33ஆயிரத்து 340ஹெக்டர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதித்தவ்களுக்கு முதல்வர் ரூ.1000 நிவாரணம் உதவி அறிவித்துள்ளார். இதன்மூலம் 1லட்சத்து 61ஆயிரம் 647 கார்டுதாரர்கள் பயனடைவர்.  கனமழையால் 2209 கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், கலெக்டர் லலிதா, சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: