மீஞ்சூர் அருகே உப்பளம் அரசு பள்ளியில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆய்வு

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி ஊராட்சி உப்பளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நேற்று துரை சந்திரசேகர் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார். பழுதடைந்த பள்ளிக்கட்டிடத்தை பார்வையிட்ட பின்னர், அந்த கட்டிடத்தை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும் கல்வியின் தரம் குறித்து ஆலோசனை நடத்தினார். சமையலறையில் பொருட்கள் மற்றும் உணவுகளை தரமாக உள்ளதா என ருசித்து பார்த்தார்.

அப்போது, பள்ளிக்கான அடிப்படை தேவைகள் குறித்து எம்எல்ஏவிடம் ஊராட்சி மன்ற தலைவர் ப்ரியா கோரிக்கை வைத்தார். ஆய்வின்போது, பள்ளி தலைமை ஆசிரியை ஹேமாவதி, உப்பளம் கிராம நிர்வாகி பாலன், ஊராட்சி செயலர் ராஜேஷ் கண்ணா, அங்கன்வாடி பணியாளர் அனிதா மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து பழவேற்காடு, ஜெகநாதபுரம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் எம்எல்ஏ ஆய்வு செய்தார். அவருடன் நேர்முக உதவியாளர் வில்சன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: