ஆரோவில் பண்ணை வீட்டில் மறைத்து வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை உள்பட 3 சோழர்கால சிலைகள் மீட்பு-ஜெர்மன் தம்பதியிடம் விசாரணை

சென்னை : ஆரோவில் பகுதியில் பண்ணை வீட்டின் படுக்கை அறையில் மறைத்து வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள நடராஜர் உள்பட 3 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஜெர்மன் தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.புதுச்சேரி மாநிலம் கோட்டகரை ஆரோவில் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் பழமையான சிலைகள் மறைத்து வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவின் தனிப்படையினர் நேற்று முன்தினம் ஆரோவில் பகுதியில் உள்ள ஜெர்மன் நாட்டை சேர்ந்த பாப்போ பிங்கல் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

 அப்போது வீட்டின் முதல் தளத்தில் உள்ள படுக்கை அறையில் யாருக்கும் சந்தேகம் வராத படி சுவரில் உள்ள ரகசிய அறையில் மிகவும் பழமையான நடராஜர், அம்மன் மற்றும் சந்திரசேகரர் ஆகியோரின் வெண்கல சிலைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.உடனே சிலை வைத்திருந்ததற்கான ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஜெர்மன் தம்பதி பாப்போ பிங்கல் மற்றும் அவரது மனைவி மோனா பிங்கலிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால், சிலை வைத்திருந்ததற்கான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை என தெரியவந்தது. அதைதொடர்ந்து 3 சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். மேலும், ஜெர்மன் நாட்டை சேர்ந்த தம்பதிகள் இதுபோன்று பழமையான சிலைகளை ஜெர்மன் நாட்டிற்கு கடத்தி ெசன்றார்களா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட 3 சிலைகளும் சோழர் காலத்தை சேர்ந்தது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது சர்வதேச மதிப்பில் பல கோடி என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: