உத்திரமேரூரில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு: க.சுந்தர் எம்எல்ஏ ஆய்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பஜார் வீதியில் உத்திரமேரூர் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோன்று பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இப்பகுதியில் பஜார் வீதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் சாலையோர கடைகளுக்கு வரும் பொதுமக்கள், தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்துகின்றனர். சில நேரங்களில் சாலையை ஆக்கிரமித்தும் நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் பஸ் நிலையத்தை மாற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் உத்திரமேரூர் அருகே வேடபாளையம் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார். மேலும் சுற்றியுள்ள இடங்கள் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதில், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் பொன்.சசிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: