தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில் போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய காவலர்: வீடியோ வைரல்

 

தாம்பரம் ஜூன் 3: குன்றத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர், நேற்று முன்தினம் இரவு தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கார் ஒன்று இவரது இருசக்கர வாகனத்தை மோதும்படி வேகமாக வந்தது. சுதாரித்துக்கொண்ட அவர், பைக்கை ஓரமாக நிறுத்தினார். அவரை கடந்து சென்ற அந்த கார், முன்னாள் சென்ற சில வாகனங்கள் மீது இடித்து சென்றது.

இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள், அந்த காரை விரட்டி சென்று மடக்கி பிடித்து பார்த்தபோது, அந்த காரை ஓட்டி வந்தது ராமதுரை என்ற காவலர் என்பதும், அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. அவரிடம், இப்படி தாறுமாறாக போதையில் காரை ஓட்டுகிறீர்களே இது நியாயமா, குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டிய நீங்களே இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடலாமா, உங்கள் செயலினால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

ஆனால், பொது மக்களின் கேள்விகள் எதுவும் புரியாத அளவிற்கு மது போதையில் இருந்த அவர் நான் எந்த தப்பும் செய்யவில்லை என உளறினார். அதற்கு பொதுமக்கள் நீங்கள் குடித்துவிட்டு மதுபோதையில் ஓட்டியது தான் தப்பு என கூறியதற்கு அவரால் எதுவும் பேச முடியவில்லை. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில் போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய காவலர்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: