கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா எழும்பூர் தொகுதியில் 10 இடங்களில் 3,000 பேருக்கு அறுசுவை உணவு: பரந்தாமன் எம்எல்ஏ ஏற்பாடு

 

சென்னை, ஜூன் 3: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி எழும்பூர் தொகுதியில் 10 இடங்களில் 3,000 பேருக்கு அறுசுவை மதிய உணவு வழங்க எம்எல்ஏ பரந்தாமன் இன்று ஏற்பாடு செய்துள்ளார். கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 10 இடங்களில் இன்று மதியம் 12 மணிக்கு அறுசுவை உணவு வழங்க பரந்தாமன் எம்எல்ஏ ஏற்பாடு செய்துள்ளார்.

சேத்துப்பட்டு, மெக்நிக்கல்ஸ் சாலை, ஹாரிங்டன் சாலை-வைத்தியநாதன் சாலை சந்திப்பு, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, புல்லாபுரம் ஆட்டோ நிறுத்தம் அருகில், சூளை நெடுஞ்சாலை – பழைய தபால் நிலையம் அருகில், புரசைவாக்கம், தானா தெரு, ஆவின் பால் பூத் அருகில், புதுப்பேட்டை ஓட்டல் கிரீன் கபே அருகில், ஈ.வெ.ரா. பெரியார் சாலை – வரதராஜா சாலை சந்திப்பு,

புரசைவாக்கம் நெடுஞ்சாலை, தாக்கர் தெரு எதிரில், புளியந்தோப்பு, டிமலஸ் சாலை, காவல் நிலையம் அருகில், பெரியமேடு மசூதி அருகில் ஆகிய 10 இடங்களில், ஒவ்வொரு இடத்திலும் தலா 300 பேர் என்ற வீத‍த்தில் 3,000 பேருக்கு அறுசுவை உணவு இனிப்புடன் வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த 10 இடங்களிலும் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு கடந்த 40 நாட்களாக தொடர்ந்து நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.

The post கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா எழும்பூர் தொகுதியில் 10 இடங்களில் 3,000 பேருக்கு அறுசுவை உணவு: பரந்தாமன் எம்எல்ஏ ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: