புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்

புழல், ஜூன் 2: புழல் அடுத்த டீச்சர்ஸ் காலனி 4வது தெருவைச் சேர்ந்தவர் ஜோஸ்வா, தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் ஜெரால்டு(12) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். இந்நிலையில், ஜெரால்டு நேற்று பிற்பகல் தனது பாட்டிக்கு உணவு கொடுப்பதற்காக சைக்கிளை தள்ளிக்கொண்டு வீட்டின் வெளியே வந்தார். அப்போது, பக்கத்து வீட்டில் இருந்த நாய் திடீரென்று ஓடிவந்து ஜெரால்டை துரத்திச் சென்று முகம், காது, மூக்கு என உடல் முழுவதும் கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த ஜெரால்டு வலியால் அலறித்துடித்தார். சத்தம் கேட்டு வந்த ஜோஸ்வா, ஜெரால்டை மீட்டு கொரட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: