பந்தலூர் அருகே பழங்குடியினர் இளைஞர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி

பந்தலூர் :  பந்தலூர் அருகே பிதர்காடு காரமூலா பழங்குடியினர் கிராமத்தில் ஆல் தி சில்ட்ரன் அமைப்பு சார்பில் பழங்குடியின இளைஞர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆல் தி சில்ரன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் வரவேற்று பேசினார்.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது, ‘பழங்குடியினர் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. உப்பட்டியில் அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிற் கல்வியாக வயர்மென், பீட்டர் போன்ற சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.  

கைவினை பொருட்கள் பலவும் பழங்குடியினர் தயாரித்து வருகின்றனர். இவற்றை வணிக நோக்கில் தயாரிப்பதான் மூலம் கைவினை பொருட்கள் விற்பனை செய்து வாழ்வாதார மேம்பாடு அடைய முடியும்.  கல்வி மூலம் வாழ்க்கை தரம் உயரும். இதனால் இடைநில்லாமல் கல்வி கற்பதை தொடர்ந்திட பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.  இவற்றை பழங்குடியினர் இளைஞர்கள் பயன்படுத்தி அரசு பணிகளுக்கு செல்ல முடியும் என்றார்.ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் பேசும்போது, ‘பழங்குடியினர்  உணவு சரியாக எடுத்து கொள்ளாமல் இருப்பதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.  இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது’ என்றார். நிகழ்ச்சியில் ஏராளமான பழங்குடியினர் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: