குன்னூரில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டி

குன்னூர் : குன்னூரில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.ஆங்கிலம் பேசும் பள்ளிகள் சங்கம் மாவட்ட அளவில் நடத்திய பெண்களுக்கான கைப்பந்து  போட்டி குன்னூர் புனித ஜோசப்  பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியை  ஜோசப் பெண்கள் பள்ளியின் முதல்வர் பௌலின், தாளாளர் அல்போன்சா தொடங்கி வைத்தனர். இப்போட்டியில்  பத்து பள்ளிகள் கலந்து கொண்டன.இதில் 14 ,17, 19 வயதிற்கு உட்பட்ட மூன்று பிரிவுகளில் மாணவிகள் பங்கேற்றனர். முதல் சுற்றில் வெற்றி பெற்றவர்கள் அரை இறுதியிலும் அரை இறுதியில் வெற்றி பெற்றவர்கள் இறுதி சுற்றிலும் பங்கேற்றனர்.

இதில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகளின் பிரிவில் புனித ஜூட் கோத்தகிரி பள்ளி முதலிடமும், இரண்டாம் இடத்தை  புனித ஜோசப் பெண்கள் பள்ளியும் பெற்றன. 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளின் பிரிவில் புனித ஜூட் கோத்தகிரி பள்ளி முதலிடமும், இரண்டாம் இடத்தை கோத்தகிரி பப்ளிக் பள்ளியும் பெற்றன. 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளின் பிரிவில் புனித ஜூட் கோத்தகிரி பள்ளி முதலிடமும் இரண்டாம் இடத்தை ரிவர் சைடு பள்ளியும் பெற்றன. வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு கேடயத்தையும் சான்றிதழ்களையும் போட்டியில் சிறப்பு விருந்தினர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் செயலாளர் ஆணி வழங்கினார். போட்டியின் இறுதியாக முதல்வர் பௌலின் நன்றி கூறினார்.

Related Stories: