நெல்லை சிக்கன நாணய சங்கத்தில் ஆவணங்களுக்கு தீவைத்த ஹெச்.எம், ஊழியர் கைது

கேடிசி நகர்: நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் உள்ளது. இதன் தலைவராக பிரபாகரன் (52) இருந்து வருகிறார். இவர், ராமநாதபுரத்தில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை கூட்டுறவு சிக்கன நாணய சங்க அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பாளை. தீயணைப்பு வீரர்கள் சென்று  தீயை அணைத்தனர்.

இது தொடர்பாக பாளை. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் ஆவணங்கள் திட்டமிட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒருவர் தீ வைத்து விட்டு செல்வது தெரிய வந்தது. இந்த காட்சிகளை ஆய்வு செய்ததில் அதே அலுவலகத்தில் தற்காலிக கிளார்க் ஆக பணியாற்றி வரும் பாளையைச் சேர்ந்த தினேஷ் (30) என்பது உறுதியானது. உடனடியாக போலீசார் அவரை  பிடித்து நடத்திய விசாரணையில் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தலைவர் பிரபாகரனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் பிரபாகரன் உட்பட இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: