ஆவடி: ஆவடி அருகே திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டில் பெரியார் நகர் உள்ளது. இங்குள்ள அனைத்து தெருக்கள், சாலைகளில் சாதாரண மழைக்கே முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஒருசில தாழ்வான வார்டுகளில் இடுப்பளவுக்குகூட மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைக் காலத்தில் சேறும் சகதியுமாக மாறி காணப்படும் சாலைகள், கோடை காலத்தில் குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெரியார் நகரில் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவரது உறவினர்கள் வந்தபோது, அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியாகினர்.
