ஆசிய கோப்பையில் இந்தியாவுடன் 28ம்தேதி மோதல்; பாகிஸ்தானுக்கு சூர்யகுமார் யாதவ் அச்சுறுத்தலாக இருப்பார்.! வாசிம் அக்ரம் கணிப்பு

துபாய்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அளித்துள்ள பேட்டி: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அணிக்கு முக்கியமானவராக இருப்பார். விராட் கோஹ்லியை விட பாகிஸ்தானை காயப்படுத்தும் ஆற்றல் அவருக்கு உள்ளது. ரோகித் சர்மா, ராகுல் மற்றும் கோஹ்லிஆகியோர் உள்ளனர். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவர்,சூர்யகுமார் யாதவ். அவர் தனிச்சிறப்பாக இருந்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்ந்த முதல் வருடத்தில் நான் அவரைப் பார்த்தேன், அவர் 7 மற்றும் 8வது இடத்தில் பேட்டிங் செய்து இரண்டு ஆட்டங்களில் விளையாடினார்.

அவர் விளையாடிய இரண்டு ஷாட்களில் பந்து அவரின் பேட்டின் நடுவில் இருந்து ஃபைன் லெக்கை நோக்கி பறந்தது. இது ஒரு அசாதாரண மற்றும் கடினமான ஷாட். அவர் இந்திய அணியில் இடம்பிடித்ததில் இருந்து பேட்டிங்கில் பார்ப்பதற்கு விருந்தாக இருக்கிறார். சுழற்பந்து வீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக மிகவும் ஆபத்தான வீரர். அவர் 360 டிகிரி வீரர். என் கருத்துப்படி, அவர் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமல்ல, அனைத்து அணிகளுக்கும் ஆபத்தான வீரர். கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி  தொடர்ந்து முன்னேறி வருகிறது. அவை சீராக இருந்துள்ளன.

கடந்த ஆண்டு டி20  உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான வெற்றி, அவர்களுக்கு நம்பிக்கையை  அளித்தது. பாகிஸ்தான் ஒரு இளம் அணி, நான் கவலைப்படும் ஒரே விஷயம் மிடில்  ஆர்டர். கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் முக்கிய இடம்   பிடித்துள்ளனர். கோப்பையை வெல்லும் அணி எது என்பதை கணிக்க முடியாது.  என்றார். சூர்யகுமார் யாதவ் இதுவரை இந்தியாவுக்காக 23 டி.20 போட்டிகளில் ஆடி 5 அரைசதங்களுடன் 37.33 சராசரியில் 672 ரன் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த மாதம் ஓவலில் நடந்த போட்டியில் 117 ரன் விளாசினார். டி.20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில்  2வது இடத்தில் உள்ளார்.

Related Stories: