ஏடிபி ஆடவர் தரவரிசை: அல்காரஸ் நம்பர் 1

லண்டன்: ஏடிபி ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று துவங்கின. இந்நிலையில், ஏடிபி ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், 12050 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அதேபோல், இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், 11500 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 5105 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர். செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் 4780 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளார்.

இத்தாலி வீரர் லொரென்ஸோ முசெட்டி, 4105 புள்ளிகளுடன் 2 நிலைகள் உயர்ந்து 5ம் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டிமினார் 6ம் இடத்தில் தொடர்கிறார். கனடா வீரர் பெலிக்ஸ் அகர் அலிஸியாமே 2 நிலைகள் சரிந்து 7ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பென் ஷெல்டன் 8, டெய்லர் பிரிட்ஸ் 9, கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் புப்லிக் ஒரு நிலை உயர்ந்து 10ம் இடம் பிடித்துள்ளனர்.

Related Stories: