நவிமும்பை: மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) தொடரின் 5வது போட்டி நவிமும்பையில் நேற்று நடந்தது. அதில் உபி வாரியர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீசியது. அதையடுத்து களமிறங்கிய உபி அணியின் துவக்க வீராங்கனைகள் கேப்டன் மெக் லேனிங் 14, ஹர்லீன் தியோல் 11 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின் வந்த போப் லிட்ச்பீல்ட் 20, கிரண் நவ்கிரே 5, ஸ்வேதா ஸெராவத் 0, தீப்தி சர்மா ஆட்டமிழக்காமல் 45, தேந்திர தோட்டின் ஆட்டமிழக்காமல் 40 ரன் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் உபி வாரியர்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்தது. பெங்களூரு தரப்பில் ஷ்ரேயங்கா பாட்டீல், நாடின் டிகிளெர்க் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து களம் இறங்கிய பெங்களூரு மகளிர் அணி 12.1 ஓவரில் 145 ரன்கள் எடுத்தது. இதனால், 9 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரபிரதேச அணியை வீழ்த்தி அபரா வெற்றிபெற்றது.
