மகளிர் டென்னிஸ் டபிள்யுடிஏ தரவரிசைப் பட்டியலில், பெலாரஸ் வீராங்கனை அரீனா சபலென்கா, 10990 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். போலந்தின் இகா ஸ்வியடெக், 8328 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். இந்த இருவருக்கும் 2662 புள்ளிகள் இடைவெளி உள்ளது. அமெரிக்காவின் கோகோ காஃப் ஒரு நிலை உயர்ந்து 3, அமெரிக்காவின் அமண்டா அனிஸிமோவா ஒரு நிலை தாழ்ந்து 4, கஜகஸ்தானின் எலெனா ரைபாகினா 5, அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா 6, இத்தாலியின் ஜாஸ்மின் பவோலினி ஒரு நிலை உயர்ந்து 7ம் இடம் பிடித்துள்ளனர்.
ரஷ்யாவை சேர்ந்த இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா ஒரு நிலை உயர்ந்து 8ம் இடமும், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 2 நிலை தாழ்ந்து 9ம் இடமும், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் ஒரு நிலை உயர்ந்து 10ம் இடமும் பிடித்துள்ளனர். சீன வீராங்கனை ஜிங்யு வாங் 14 நிலை உயர்ந்து 43ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல், அதேபோல் அமெரிக்காவின் ஆஷ்லின் க்ருகெர் 12 நிலை தாழ்ந்து 61ம் இடத்துக்கு சரிந்துள்ளார்.
