ராசிபுரத்தில் 1371 மூட்டை பருத்தி ₹47 லட்சத்திற்கு ஏலம்

ராசிபுரம் : ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் அக்கரைப்பட்டியில் நடந்த பருத்தி ஏலத்தில் 1371 மூட்டை பருத்தி ₹47 லட்சத்திற்கு ஏலம் போனது. ராசிபுரம் வேளாண்மை விற்பனை கூட்டுறவு சங்கத்தின் கிளையான வெண்ணந்தூர் அடுத்த அக்கரைப்பட்டியில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. அக்கரைப்பட்டி,  பாலமேடு, மாமுண்டி, பொரசல்பட்டி, ஓ.சவுதாபுரம், காகாபாளையம், வையப்பமலை,  ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், சுரபி ரக பருத்தி 1371 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

பருத்தியை ஏலம் எடுக்க அவிநாசி, அன்னூர், திருப்பூர்,  கோவை, திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். சுரபி ரக பருத்தி அதிகபட்சமாக 12350க்கும், குறைந்தபட்சமாக 9899க்கும் ஏலம் போனது. இதில், மொத்தம் 1371 மூட்டை பருத்தி, ₹47லட்சத்திற்கு ஏலம் போனது.

Related Stories: