ஆவின் நிறுவனம் சார்பில் பாட்டில் குடிநீர்: அமைச்சர் சா.மு.நாசர் அறிவிப்பு

சென்னை: ஆவின் நிறுவனம் சார்பில் பாட்டில் குடிநீர் தயாரித்து விற்க்கப்படும் என்று அமைச்சர் சா.மு.நாசர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆவினுக்கு சொந்தமான 28 பால் பதப்படுத்தும் நிலையங்களிலும் குடிநீர் தயாரிக்க வசதிகள் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆவின் பால் பதப்படுத்தபடும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் குடிநீர் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். ஆவின் சார்பில் 1 லிட்டர் மற்றும் அரை லிட்டர் அளவுகளில் குடிநீர் பாட்டில்களில் அடைத்து விற்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆவின் பால் பாக்கெட்டுகள் மீது திரைப்பட விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் நாசர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது பால் பாக்கெட்டுகள் மீது அரசு விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார். அரசு விளம்பரங்களை போலவே திரைப்பட விளம்பரங்களை ஆவின் பாக்கெட்டுகளில் அச்சிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: