திருமங்கலம்:பெங்களூரிலிருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி வரையில் நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்த சாலையில் மதுரை மாவட்டம் சமயநல்லூரிலிருந்து விருதுநகர் வரையில் தற்போது வாகனங்களின் வேகங்களை கண்காணிக்கும் கேமிராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 தினங்களாக திருமங்கலம், கப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் நடுவே அமைக்கப்பட்ட தூண்களில் இரண்டு வேக கட்டுபாட்டினை காட்டும் கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று சோதனை முயற்சியாக கப்பலூர் காலனி பஸ்ஸ்டாப் அருகே வேக கட்டுப்பாடு கேமிராக்கள் இயக்கப்பட்டன.