சிவகங்கையில் காவல் உதவி ஆய்வாளர் மண்டை உடைப்பு: காவலர் கைது

சிவகங்கை: எஸ்.ஐ பரசிவத்தின் மண்டையை உடைத்த இளையான்குடி காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி கைது செய்யப்பட்டார். பூவாந்தியில் மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த காவலர் முத்துபாண்டியை எஸ்.ஐ பரமசிவம் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த காவலர் முத்துப்பாண்டி சோதனைச்சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. பரமசிவத்தை தாக்கியுள்ளார். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காவலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories: