சாதிவெறி செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாநகரில் இளைஞர் மதனும், இளம்பெண் உதய தாட்சாயினியும் இல்லற வாழ்வை தொடங்க முனைந்த போது சாதி வெறிக் கும்பல் வன்முறையில் ஈடுபட்டிருப்பதையும், இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக் குழு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சூறையாடியுள்ளதை கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது. இதுதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், வழக்கு பதிவு செய்வதிலும், சாட்சியங்களை உறுதி செய்வதிலும் ஆவண சாட்சியங்களை பாதுகாத்து, நீதிமன்றத்தில் குற்றத்தை உறுதிப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தருவதிலும் காவல் துறை சமரசமின்றி செயல்பட வேண்டும். இதற்காக சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கும் சட்டம் ஒன்றை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும். மதன் – உதய தாட்சாயினி அச்சமின்றி வாழ உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

The post சாதிவெறி செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: