சிவகங்கை சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலய வைகாசி தேரோட்ட விழா: 3 லட்சம் சிதறு தேங்காய்கள் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலய வைகாசி தேரோட்டவிழாவில் பக்தர்கள் 3 லட்சம் சிதறு தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிணம்புணரி அருள்மிகு ஸ்ரீசேவுகப்பெருமாள் அய்யனார் ஆலைய வைகாசி விசாகா பிரமோற்சவ விழா கடந்த ஜுன் 5ம் தேதி தொடங்கியது. 9ம் நாளான இன்று திரு தேரோட்டம் நடைபெற்றது. பூரணை, புஸ்களையுடனான சேவுகப்பெருமாள் அய்யனார் காலை 10 மணியளவில் திருத்தேரில் எழுந்தருளினார். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிடாரி அன்னை ஆகிய சிறிய ரதத்தில் அருள்பாலித்தனர். நாடார்கள் மேளதாளத்துடன் வந்து நேற்று மாலை 4.30 மணிக்கு வடம் பிடித்து தேரை இழுத்தனர். 4 ரத வீதிகளிலும் ஓடிவந்த திருதேர் சரியாக காலை 5.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது.

2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத காரணத்தால் இந்த வருடம் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் சிங்கம்புணரி மக்கள் நேரடியாகவும் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக 1,501 மற்றும் 101 என எண்ணிக்கையில் கொண்டுவரப்பட்ட தேங்காய்களை கல்மேடையில் வீசி எரிந்து உடைத்தனர். சிதறு தேங்காயை வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக ஹெல்மெட் அணிந்தவர்கள் பலரும் தேங்காயை சேகரித்தனர். 1 மணி நேரத்திற்கும் மேலாக தேங்காய்கள் சிதறி அடிக்கப்படும் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தது. இந்த நிகழ்வில் 3 லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.       

Related Stories: