கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல்வர் இன்றும், நாளையும் கள ஆய்வு: 4.82 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்; ரூ.3,868.74 கோடி திட்ட பணிகளை திறந்தும் வைக்கிறார்

சென்னை: கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொள்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சென்று வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடனும், அரசின் அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 தளங்கள் கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கிறார். 100 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2525 திட்டப் பணிகள் திறந்துவைக்கப்படுகின்றன.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 81 கோடியே 59 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டங்கள் திறக்கப்படுகின்றன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 7 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவிலான ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டாரப் பொது சுகாதார ஆய்வக கட்டடங்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குடிநீர் திட்டப் பணி 6 கோடியே 62 லட்சம் மதிப்பீடு திறக்கப்படுகின்றன.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கள்ளக்குறிச்சியில் 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்கு 1 கோடியே 95 லட்சம் மதிப்பீடு திறக்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சங்கராபுரம் பேரூராட்சியில் கட்டப்பட்டுள்ள 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடம் திறக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

அடுத்த நாளான நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு, மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெறும் அரசு விழாவில் 631 கோடியே 48 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவிலான 314 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 63 கோடியே 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 194 பயனாளிகளுக்கு 1400 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

55 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் திருவண்ணாமலை மாநகரத்திற்கான குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள்; உயர்கல்வித் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 12 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 4 ஆய்வுக் கூடங்கள்; பள்ளிக் கல்வித் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 56 கோடியே 47 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் ஆண்கள், பெண்கள் விடுதிகள், போளூர், வடமாதிமங்கலம், வடிஇலுப்பை, தச்சூர், நாரையூர், மாமண்டூர், இளங்காடு, வெளுங்கனந்தல் ஆகிய அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள், அரசுவெளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் 22 கோடியே 73 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், கழிவறைகள் மற்றும் கண்ணமங்கலம், மடம், ஆணைபோகி ஆகிய இடங்களில் 66 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கிளை நூலக கட்டடம், புதிய ஊர்ப்புற நூலகக் கட்டடங்கள்;

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், திருவண்ணாமலை-அரூர் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, காஞ்சிபுரம்-திருவத்திபுரம் சாலை ஆகிய இடங்களில் 161 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் இருவழித்தடத்திலிருந்து அகலப்படுத்தப்பட்ட நான்கு வழித்தட சாலைகள்; நீர்வளத் துறை சார்பில், காமக்கூர் ஊராட்சி – கமண்டல நாகநதி, படிஅக்ரஹாரம் ஊராட்சி-செய்யாறு, செங்கம் நகரம்-செய்யாறு, மேல்கொடுங்கலூர் ஊராட்சி-சுகநதி, ரெட்டியார்பாளையம்-பாம்பானாறு, தொழுப்பேடு-செய்யாறு, அம்மாபாளையம் ஊராட்சி-நாகநதி ஆகிய இடங்களில் 35 கோடியே ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், தண்டராம்பட்டு வட்டம்-ரெட்டியார்பாளையம் ஊராட்சி, சாத்தனூர் அணையில் 15 கோடியே 5 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.127 கோடியே 20 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணைசுகாதார நிலையங்கள், உயர்மட்டப் பாலங்கள் முதலிய 243 முடிவுற்றப் பணிகள் உட்பட மொத்தம் 571 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவிலான 312 திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,400 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 66 ஆயிரத்து 194 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Related Stories: