15 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் பணிக்கு திரும்பினார்

சென்னை: காவல்துறை டிஜிபி வெங்கடராமன் (பொறுப்பு) காலை வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்ட போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உடனே டிஜிபியை கிண்டியில் உள்ள கலைஞர் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் ரத்தக்குழாய்களில் இரண்டு அடைப்புகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்தக்குழாய் அடைப்புகள் சரி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவின்படி கடந்த 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை பொறுப்பு டிஜிபி வெங்கடராமனுக்கு மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது. பொறுப்பு டிஜிபி விடுப்பில் சென்றதால் அப்பதவிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக பணியாற்றி வரும் அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த டிஜிபி வெங்கடராமன் முழுவதுமாக குணமடைந்தார். பின்னர் 15 நாட்கள் மருத்துவ விடுப்புக்கு பிறகு நேற்று முன்தினம் மீண்டும் தமிழக காவல் துறையின் இயக்குநராக (பொறுப்பு) வெங்கடராமன் பணியை தொடங்கினார். கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த அபய்குமார் சிங் 5 நாட்கள் விடுப்பில் சென்றுள்ளார்.

Related Stories: