கார் மோதி பாதயாத்திரை சென்ற 3 பெண்கள் பலி

ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா வீரபாண்டியன்பட்டினம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக திருச்செந்தூரில் இருந்து நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையில் நேற்று மாலையில் குறுக்குச்சாலை அடுத்துள்ள பாலம் அருகே சென்றபோது தூத்துக்குடியில் இருந்து மதுரை சென்ற கார் பக்தர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்த சுந்தரராணி (60), இசக்கியம்மாள் (55), கரம்பாவிளையைச் சேர்ந்த கஸ்தூரி (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவரான தஞ்சாவூர் வடக்கு கேட் பகுதியை சேர்ந்த ராம் பிரசாத்தை (32) கைது செய்தனர்.

Related Stories: