விபத்தில் 9 பேர் பலியில் அரசு பஸ் டிரைவர் கைது: காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் ஆறுதல்

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்த எழுத்தூர் அருகே நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பஸ், முன்பக்க டயர் திடீரென வெடித்து, தடுப்பு கட்டையை தாண்டி எதிர் திசையில் சென்னையில் இருந்து திருச்சி சென்ற 2 கார்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியதில் குழந்தை உள்பட 9 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர்களை அமைச்சர்கள் சி.வெ.கணேசன், சிவசங்கர் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவரான மதுரை ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்த தாஹா அலியை (45) 3 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து ராமநத்தம் போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் 9 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்ததும் அமைச்சர் சிவசங்கர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் கரூர், புதுக்கோட்டை, திருச்சி என அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு அரசு ஆம்புலன்ஸ்களில் 9 பேரின் உடல்களும் நேற்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories: