பதவி நிரந்தரமான 8 நீதிபதிகள் இன்று பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சக்திகுமார், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதையடுத்து குடியரசு தலைவர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து, நிரந்தர நீதிபதிகள் 8 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நூலக கூட்ட அரங்கில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். நீதிபதி சத்திகுமார் வேறுஒரு நாளில் பதவி ஏற்பார்.

மேலும் 2 கூடுதல் நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த உத்தரவின் அடிப்படையின் படி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இரண்டு கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நீதிபதிகள் சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு ஆகிய இருவரையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகள் சீனியாரிட்டி அடிப்படையின் பேரில் நியமனம் செய்துள்ளார்.

Related Stories: